ஜூலை 6- இல் மாவட்ட அளவில் கலை, இலக்கியப் போட்டிகள்

தமிழ்நாடு பொன்விழா ஆண்டை முன்னிட்டு, கலை பண்பாட்டுத் துறை சார்பில் மாவட்ட அளவிலான கலை, இலக்கியப் போட்டிகள் ஜூலை 6 ஆம் தேதி நடைபெற உள்ளது.

தமிழ்நாடு பொன்விழா ஆண்டை முன்னிட்டு, கலை பண்பாட்டுத் துறை சார்பில் மாவட்ட அளவிலான கலை, இலக்கியப் போட்டிகள் ஜூலை 6 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு என்னும் பெயரோடு இணைக்கப்பட்டு 50 ஆண்டு நிறைவடைந்ததையொட்டி, பொன்விழா ஆண்டாகக் கொண்டாட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்ட அளவில் கலைப்போட்டிகள் நடத்தப்பட்டு, மாநில அளவிலும் நடைபெற உள்ளது.
மாவட்ட கலைப் போட்டிகளில் நாட்டுப்புற நடனம், தமிழிசை வாய்ப்பாட்டு, பரதம் (பாரதியார், பாரதிதாசன் பாடல்கள்) ஆகிய கலைகளில் போட்டிகள் நடைபெறும். இப் போட்டிகளில் 15 வயது முதல் 30 வயதுடையோர் மட்டுமே கலந்து கொள்ளலாம். மாணவ, மாணவிகள் மற்றும் தொழில்முறைக் கலைஞர்களும் பங்கேற்கலாம்.
போட்டிகளில் முதல் பரிசாக ரூ. 5 ஆயிரம், 2 ஆம் பரிசு ரூ. 3 ஆயிரம், 3 ஆம் பரிசு ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும். முதல் 3 பரிசு பெறுபவர்கள் மாநில போட்டிகளில் பங்கேற்கலாம்.மாநிலப் போட்டிகளில் வெல்வோருக்கு முதல் பரிசு ரூ. 50 ஆயிரம், 2 ஆம் பரிசு ரூ. 25 ஆயிரம், 3 ஆம் பரிசு ரூ. 10 ஆயிரம், தலா 4 கிராம் தங்கப் பதக்கம் வழங்கப்படும். மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியில் உள்ள கிறிஸ்டியன் கல்வியியல் கல்லூரியில் நடைபெறும். போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் ஜூலை 6  காலை 9 மணிக்கு போட்டி நடைபெறும் இடத்துக்கு நேரில் சென்று தங்களது பெயரை பதியலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com