Enable Javscript for better performance
பாலமுருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா தொடக்கம்: மார்ச் 30 -இல் தேரோட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பாலமுருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா தொடக்கம்: மார்ச் 30 -இல் தேரோட்டம்

    By DIN  |   Published on : 24th March 2018 04:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் - எளம்பலூர் சாலையில் உள்ள பாலமுருகன் கோயிலில் 38-வது ஆண்டு பங்குனி உத்திர பெருந்திருவிழா அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை மற்றும் வாஸ்து சாந்தி பூஜையுடன் வியாழக்கிழமை தொடங்கியது.
    விழாவில் வரும் 28 ஆம் தேதி பாலமுருகன், வள்ளி- தெய்வானை திருக்கல்யாண உற்சவமும், 30 ஆம் தேதி பங்குனி உத்திர தேரோட்டமும் நடைபெறவுள்ளன. தேரோட்டத்தையொட்டி, அன்று காலை தெப்பக்குளம் அருகேயுள்ள ஐயப்பன் கோயிலில் இருந்து காவடி புறப்பாடும், மாலை 3 மணிக்கு சப்பரத் தேரோட்ட நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
    திருவிழாவை முன்னிட்டு மார்ச் 31 ஆம் தேதி வரை நாள்தோறும் காலை 8 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு ஸ்ரீபாலமுருகன் திருவீதி உலாவும், 28 ஆம் தேதி அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.
    மார்ச் 31 ஆம் தேதி மஞ்சள் நீர், விடையாற்றி விழாவும், இரவு 7 மணிக்கு தாளம் தர்ஷினியின் நாட்டிய நிகழ்ச்சியும், ஆன்மிக பேச்சாளர் சுகி. சிவம் நடுவராக பங்கேற்கும் வாழ்க்கை என்பது பூந்தோட்டமா? போராட்டமா? எனும் தலைப்பில் பட்டிமன்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து ஏப். 6 ஆம் தேதி பஞ்சாட்சர திருவிழா நடைபெறுகிறது.
    ஏற்பாடுகளை விழாக் குழுவினர், பெரம்பலூர் மக்கள் நற்பணி மன்றத்தினர் செய்துவருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai