Enable Javscript for better performance
பெரம்பலூரில்வீராங்கனைகளுக்கு மார்ச் 27-இல் மாவட்ட அளவிலான தேர்வுப் போட்டிகள்- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூரில்வீராங்கனைகளுக்கு மார்ச் 27-இல் மாவட்ட அளவிலான தேர்வுப் போட்டிகள்

    By DIN  |   Published on : 24th March 2018 04:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மத்திய அரசின் கேலோ இந்தியா தேசிய மகளிர் விளையாட்டுப் போட்டிகள் திட்டத்தின் கீழ், பெரம்பலூர் மாவட்ட அளவிலான தேர்வுப்போட்டிகள் மார்ச் 27 ஆம் தேதி பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் விளையாட்டு வளாகத்தில் நடைபெற உள்ளது.
    இத்தேர்வுப் போட்டிகளில் பங்கேற்கும் பெண்கள் 31.12.2017 -இல் 25 வயதுக்குள்பட்டவர்களாகவும், வயதுச் சான்றிதழ் அவசியம் கொண்டு வர வேண்டும்.
    இவ்விளையாட்டுப் போட்டிகளில் கோ-கோ, கபடி, கையுந்து பந்து, கூடைப்பந்து, பளுதூக்குதல் ஆகிய விளையாட்டுகளுக்கு தலா 2 நபர்களும், இறகுப்பந்து, மேசைப்பந்து, நீச்சல், மல்யுத்தம், வளைகோல்பந்து, குத்துச்சண்டை ஆகிய விளையாட்டுகளுக்கு தலா 1 நபரும், தடகள விளையாட்டில் தலா 4 நபர்களும் தேர்வு செய்யப்படுவார்கள்.
    தேர்வு செய்யப்படும் வீராங்கனைகள், மாநில அணி தேர்வுப் போட்டிகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் அழைத்துச் செல்லப்பட உள்ளனர் என மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ம. ராமசுப்ரமணியராஜா செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai