Enable Javscript for better performance
பெரம்பலூரில் முன்னாள் படைவீரர்கள் குறைதீர் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி பேசியது: முன்னாள் படைவீரர்கள் தங்களது குறைகளை நேரில் தெரிவித்து பயனடைய வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் ராணுவத்தில் அதிக இளைஞர்கள் சேருவதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். படைவீரர்கள் ராணுவத்தில் பணியாற்றியதை கருத்தில்கொண்டு, அவர்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனடியாக பதில் அளிக்க வேண்டும் என்றார் அவர். இக்கூட்டத்தில், முன்னாள் படைவீரர்களிடமிருந்து 5 மனுக்கள் பெறப்பட்டன. இதில், மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் கா. குணசேகரன், நல அமைப்பாளர் சி. சடையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai