Enable Javscript for better performance
பெரம்பலூரில் வருமான வரி சேவை மையம் திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் வருமான வரித்துறை அலுவலகத்தில், வருமான வரி சேவை மையம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    இந்த மையத்தை திறந்துவைத்தும், மையப் பணிகளை தொடக்கி வைத்தும் திருச்சி வருமான வரித்துறை தலைமை ஆணையர் பிரமோத் நான்கி பேசியது:
    பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் கடந்த ஆண்டு ரூ. 12 கோடி வருமான வரியை மக்கள் செலுத்தி உள்ளனர். இந்தியாவில், வருங்காலத்தில் வருமான வரி வசூல் ரூ. 10 லட்சம் கோடியை அடைவது இலக்கு. தற்போது 6 கோடி பேர் வருமான வரி செலுத்துவோராக உள்ளனர்.
    இந்த சேவை மையத்தில் அளிக்கப்படும் மனுக்களுக்கு ரசீது வழங்கப்பட்டு 30 நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கெனவே 75 சதவீத மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. எப்போதும்போல, நிகழாண்டும் மார்ச் 31 ஆம் தேதி வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாளாகும் என்றார் அவர். திருச்சி வருமான வரித்துறை முதன்மை ஆணையர் மீனா பேசியது:
    பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் கார்ப்ரேட் இல்லாதோரில் ரூ. 10 லட்சத்துக்கும் கீழ் வருமானம் உள்ளவர்களும், கார்ப்ரேட் நிறுவனங்களில் ரூ. 15 லட்சத்துக்கும் கீழ் வருமானம் உள்ளவர்களும் வருமான வரி தாக்கல் செய்கின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 7,921 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 7,003 பேரும் வரி செலுத்துகின்றனர். திருச்சி மண்டலத்தில் 13 வருமான வரித்துறை அலுவலகங்கள் உள்ளன. பெரம்பலூரில் 12 -வது வருமான வரி சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது.
    இச்சேவை மையத்தில் கொடுக்கப்படும் மனுக்கள் பதிவு செய்யப்பட்டு, எக்காலத்திலும் மனுக்கள் மீதான நடவடிக்கையின் தன்மையை கண்டறியலாம். வருமான வரித்துறையில் வரி செலுத்துவோருக்கு மேம்படுத்தப்பட்ட சேவையை வழங்குவதற்காகவே இம்மையங்கள் திறக்கப்படுகின்றன என்றார் அவர்.
    இவ்விழாவில் வருமான வரித்துறை அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai