Enable Javscript for better performance
போலீஸாரின் செயல்பாடுகளை கண்டித்து பெரம்பலூரில் வழக்குரைஞர்கள் பணி புறக்கணிப்பு- Dinamani

சுடச்சுட

    

    போலீஸாரின் செயல்பாடுகளை கண்டித்து பெரம்பலூரில் வழக்குரைஞர்கள் பணி புறக்கணிப்பு

    By DIN  |   Published on : 24th March 2018 04:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் மாவட்டத்தில் வழக்குரைஞர்கள் பணியில், காவல்துறையினரின் இடையூறைக் கண்டித்து, வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.
    பெரம்பலூர் மாவட்டம், மங்கலமேடு காவல்துறை துணை கண்காணிப்பாளர் மற்றும் பெரம்பலூர் காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோர், வழக்குரைஞர்களை அவமரியாதை செய்வதாகவும், வழக்கு தொடர்பாக காவல் நிலையம் செல்லும் வழக்குரைஞர்களிடம் அநாகரீகமாக பேசுவதாகவும் கூறி பணி புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது.
    பெரம்பலூர் பார் அசோசியேசன் தலைவர் வள்ளுவன் நம்பி, பெரம்பலூர் வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் பிச்சை தலைமையில், பெரம்பலூர் மாவட்ட வழக்குரைஞர்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் நீதிமன்றப் பணிகளை புறக்கணித்தனர். இதனால் நீதிமன்றங்களில் வழக்கு விசாரணை பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
    நீதிமன்ற வளாகத்தில், பெரம்பலூர் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் சஞ்சீவி பாஸ்கர் தலைமையில், காவல்துறை கூடுதல் துணை கண்காணிப்பாளர் ஞான. சிவக்குமார் மற்றும் வழக்குரைஞர்கள் சங்க நிர்வாகிகளுடன் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது.
    இதில், சுமூக முடிவு காணப்படாததால் சமரச பேச்சுவார்த்தையை திங்கள்கிழமை தொடர முடிவு செய்யப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai