Enable Javscript for better performance
மதனகோபால சுவாமி கோயில் பங்குனி உத்திர திருவிழா தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    மதனகோபால சுவாமி கோயில் பங்குனி உத்திர திருவிழா தொடக்கம்

    By DIN  |   Published on : 24th March 2018 04:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூரில் உள்ள மதனகோபாலசுவாமி கோயில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. மார்ச் 31 ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
    பெரம்பலூரில் உள்ள மரகதவல்லித் தாயார் சமேத மதனகோபால சுவாமி கோயில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் கொடியேற்றம் நடைபெற்றது.
    நிகழ்ச்சியையொட்டி, மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், மகாதீபாராதனையும் நடைபெற்றது.
    தொடர்ந்து, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மதனகோபால சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வைத்து, கொடி மரத்தின் முன்பு எழுந்தருள செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது.
    சிறப்பு பூஜைகள் மற்றும் கொடியேற்ற உற்ஸவத்தை, கோயில் அர்ச்சகர் பட்டாபிராமன் தலைமையில், சென்னை திருமழிசை ஆழ்வார் திருத்தல பட்டாச்சாரியார் திரிவிக்ரமன், துணை பட்டாச்சாரியார் ரகுராமன் குழுவினர் நடத்தி வைத்தனர். தொடர்ந்து இரவு ஹம்ச வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது.
    விழாவில், சனிக்கிழமை சிம்ம வாகனத்திலும், ஞாயிற்றுக்கிழமை பல்லக்கு அனுமந்த வாகனத்திலும், 26 ஆம் தேதி பல்லக்கு சேஷ வாகனத்திலும், 27 ஆம் தேதி உதயகருட சேவை, வெள்ளி கருட வாகனத்திலும், 28 ஆம் தேதி பல்லக்கு யானை வாகனத்திலும் சுவாமி திருவீதி உலா நடைபெறுகிறது.
    முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவம் 29 ஆம் தேதி மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை நடைபெறுகிறது.
    31 ஆம் தேதி காலை 10.30 மணி முதல் 11.30 மணிக்குள் திருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    விழா ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத் துறையினர், கோயில் நிர்வாகத்தினர் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்துவருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai