Enable Javscript for better performance
ரயில்வே எழுத்துத் தேர்வு: ஏப். 4 முதல் இலவச பயிற்சி வகுப்பு- Dinamani

சுடச்சுட

    

    ரயில்வே எழுத்துத் தேர்வு: ஏப். 4 முதல் இலவச பயிற்சி வகுப்பு

    By DIN  |   Published on : 24th March 2018 04:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ரயில்வே வாரியம் நடத்தவுள்ள எழுத்துத் தேர்வை எழுதவுள்ளோருக்கு
    மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் ஏப். 4 ஆம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளது என்றார் ஆட்சியர் வே. சாந்தா.
    ரயில்வே தேர்வு வாரியம் மூலமாக 3.02.2018 வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, இந்திய ரயில்வே துறையில் ரயில் ஓட்டுநர் உதவியாளர் உள்ளிட்ட 26,502 பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது
    இப்பணியிடங்களுக்கு மார்ச் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இத்தேர்வுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்பு தொடங்கப்பட உள்ளது.
    பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்ப நகல், கடவுச்சீட்டு அளவு புகைப்படம், சுய விவரக் குறிப்பு, மின்னஞ்சல் முகவரி மற்றும் செல்லிடப்பேசி எண் ஆகிய விவரங்களுடன் ஏப்ரல் 3 ஆம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பித்து, இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயனடையலாம் என ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai