Enable Javscript for better performance
உலகத் திறனாய்வு போட்டியில் அரசுப் பள்ளி சிறப்பிடம்- Dinamani

சுடச்சுட

    

    மண்டல அளவிலான உலகத் திறனாய்வுப் போட்டியில் சில்லக்குடி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர். 
    திருச்சி மாவட்ட விளையாட்டு அரங்கில், 8 கல்வி மாவட்டங்கள் அடங்கிய மண்டல அளவிலான உலகத்திறனாய்வு போட்டிகள் கடந்த 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. 
    இப்போட்டிகளில், பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டத்துக்குள்பட்ட சில்லக்குடி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் 8 பேர் கலந்து கொண்டனர். 
    இதில், 6 ஆம் வகுப்பு மாணவர்களான அருண்குமார், உ. முகேஷ் ஆகியோர் நீளம் தாண்டுதல் போட்டியிலும், செல்வநாயகி உயரம் தாண்டுதல் போட்டியிலும், 7 ஆம் வகுப்பு மாணவர்களான சு. தீபக், நீளம் தாண்டுதல் போட்டியிலும், பா. கிரிஷா உயரம் தாண்டுதல் போட்டியிலும், 8 ஆம் வகுப்பு மாணவி ம. பரமேசுவரி நீளம் தாண்டுதல் போட்டியிலும் வெற்றி பெற்றனர்.  வெற்றி பெற்ற 6 மாணவ, மாணவிகளுக்கும் தலா ரூ. 6 ஆயிரம் ரொக்கப்பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. 
    மண்டல அளவிலான திறனாய்வுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் கோ. சங்கர் ஆகியோரை பள்ளித் தலைமை ஆசிரியர் (பொ) ச. சங்கீதா பாராட்டி பரிசு வழங்கினார். பெரம்பலூர் மாவட்டத்தில், கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மண்டல அளவிலான உலகத் திறனாய்வு போட்டியில் பரிசு பெறும் ஒரே அரசுப்பள்ளி என்ற பெருமையை பெற்றுள்ளது சில்லக்குடி அரசு உயர்நிலைப் பள்ளி. 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai