Enable Javscript for better performance
கிராமங்களில் கருப்புக் கொடியேற்றி போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, பெரம்பலூர் மாவட்டத்தில் 4 கிராமங்களில் வீடுகளில் கருப்புக் கொடியேற்றி போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.  
    பெரம்பலூர் மாவட்டம்,  தங்க நகரம், அருமடல், கீழப்பெரம்பலூர், பாளையம் ஆகிய கிராமங்களில், விவசாயிகள் சிலர் தங்களது வீடுகளில் கருப்புக்கொடியேற்றி தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.  அருமடல் கிராமத்தில் உள்ள சறுக்கு பாலம் அருகே, சுமார் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கருப்பு கொடியேந்தி  முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
    அரியலூரில்... அரியலூர் மாவட்டம் செந்துறை கிழக்கு ஒன்றிய பாமக சார்பில் வெள்ளிக்கிழமை வீடுகளில் கருப்பு கொடியேற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். மருவத்தூர்,சேடக்குடிக்காடு, நயினார்குடிக்காடு, ஆசாவீரன்குடிக்காடு, தாமரைப்பூண்டி, புதுப்பாளையம், ஆதனக்குறிச்சி, முள்ளுக்குறிச்சி,தெத்தேரி, ஆலத்தியூர் உள்ளிட்ட கிராமங்களிலும் கருப்புக் கொடியேற்றப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai