Enable Javscript for better performance
கோயிலுக்கு வந்த மூதாட்டியிடம்  10 பவுன் பறிப்பு- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் மதனகோபால சுவாமி திருக்கோயிலுக்கு வந்த மூதாட்டியிடம் வியாழக்கிழமை இரவு 10 பவுன் நகை பறிக்கப்பட்டது.
    இக்கோயிலில் பங்குனி உத்திர தேரோட்டம் சனிக்கிழமை (மார்ச் 31) நடைபெறுவதையொட்டி, வியாழக்கிழமை இரவு கோயில் வளாகத்தில் திருக்கல்யாணம் நடைபெற்றது. நிகழ்ச்சியில், பெரம்பலூர்- எளம்பலூர் சாலையில் உள்ள கம்பன் நகரைச் சேர்ந்த தனலட்சுமி (60) பங்கேற்றார். 
    நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தபோது அவர் அணிந்திருந்த 10 பவுன் நகை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. 
    இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில், பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai