Enable Javscript for better performance
பெரம்பலூரில் சிலுவைப்பாதை ஊர்வலம்- Dinamani

சுடச்சுட

    

    ஏசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட வெள்ளிக்கிழமை, உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் புனித வெள்ளியாக அனுசரித்து வருகின்றனர். அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் புனித வெள்ளியை முன்னிட்டு சிலுவைப் பாதை ஊர்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
    கிறிஸ்தவர்களின் தவக்காலம் சாம்பல் புதன் தினத்துடன் கடந்த பிப். 14 ஆம் தேதி தொடங்கியது. அதைத்தொடர்ந்து, கடந்த வாரம் குருத்தோலை ஞாயிறு முதல் கிறிஸ்தவர்களின் புனித வாரம் தொடங்கியது.  பெரிய வியாழன் அன்று தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது. பெரம்பலூர் புனித பனிமய மாத தேவாலயத்தில் நடைபெற்ற பாதம் கழுவும் நிகழ்ச்சியில் மதகுருமார்கள் இளைஞர்களின் பாதங்களை கழுவி முத்தமிட்டனர். தொடர்ந்து, புனித வெள்ளியை முன்னிட்டு புனித பனிமய மாதா கோயிலில் சிலுவை பாதை ஊர்வலம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கிறிஸ்தவ பொதுமக்கள், புனித டோம்னிக், புனித ஜோஸப், பாத்திமா ஆகிய பள்ளிகளின் கன்னியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாலையில் திவ்ய நற்கருணை ஆராதனையும், தேவாலயங்களில் சிலுவை முத்தமிடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
    இதேபோல, பாளையம், நூத்தப்பூர், அன்னமங்கலம், பாடாலூர், எறையூர், தொண்டமாந்துறை, திருவாலந்துறை, திருமாந்துறை, பாத்திமாபுரம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களில் சிலுவைப்பாதை ஊர்வலமும், திவ்ய நற்கருணை ஆராதனை, சிலுவை முத்தமிடும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai