Enable Javscript for better performance
இன்று எரிவாயு நுகர்வோர் குறைதீர்க் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், எரிவாய உருளை நுகர்வோர் குறைதீர்க் கூட்டம் வெள்ளிக்கிழமை (மே 18) மாலை நடைபெறுகிறது.  
    பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நிறுவன எரிவாயு நுகர்வோர்களுக்கும் மறுநிரப்பு எரிவாயு உருளைகள் விநியோகத்தில் காணப்படும் குறைகள், நுகர்வோர்கள் பதிவு செய்த குறைகளின் மீது நடவடிக்கை எடுப்பதில் காணப்படும் எரிவாயு முகவர்களின் மெத்தனப்போக்கு உள்ளிட்டவை தொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில், எரிவாயு நுகர்வோர் குறைதீர்க் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்துக்குள்பட்ட எரிவாயு நுகர்வோர்கள் தங்களது குறைகளை புகார்களாகத் தெரிவித்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் வெ. சாந்தா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai