Enable Javscript for better performance
கூட்டுறவு சங்கம் செயல்பட நடவடிக்கை: ஆட்சியரகம் முற்றுகை- Dinamani

சுடச்சுட

    

    கூட்டுறவு சங்கம் செயல்பட நடவடிக்கை: ஆட்சியரகம் முற்றுகை

    By DIN  |   Published on : 18th May 2018 09:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கூட்டுறவு சங்கங்கள் முழுமையாக செயல்பட நடவடிக்கை எடுக்கக்கோரி, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் சங்கத்தினர் வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.  
    இதுகுறித்து, சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட கிளையைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஆட்சியர் வே. சாந்தாவிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:  தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் பொறுப்பில் இருந்த நிர்வாகக் குழுவின் பதவிக் காலம் கடந்த 8 ஆம் தேதியுடன் முடிவுற்றது.  இதைத் தொடர்ந்து கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் பல்வேறு நடவடிக்கைகளால் முடங்கிப் போயுள்ளது. இதனால் கூட்டுறவு சங்கங்களின் நடவடிக்கைகள் அனைத்தும் முற்றிலும் முடங்கிப் போயுள்ளது. எனவே, இப்பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் வரும் 21 ஆம் தேதி முதல் ஒட்டுமொத்த விடுப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் எனத் தெரிவித்துள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai