Enable Javscript for better performance
தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே, 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
       மாவட்டத் தலைவர் மருத்துவர் அருண்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், 50 சதவீத இட ஒதுக்கீட்டிற்கான சட்டத்தை வருகிற சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும். நீட் தேர்விலிருந்து, தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மருத்துவ அலுவலர்களுக்கு துறை ரீதியான பதவி உயர்வு வழங்க வேண்டும். மருத்துவ அலுவலர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
    ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலர் மருத்துவர் கண்ணன், மாவட்ட மகளிரணி தலைவர்  ஸ்ரீதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  இதில், மாவட்ட துணைத்தலைவர் சுரேஷ்குமார், மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு மருத்துவர் அரவிந்தன், மருத்துவர் சேசு உள்பட 50-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்றனர்.
    சாலை மறியல்: 94 விவசாயிகள் கைது
    பெரம்பலூர், மே 17: பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள், டிராக்டர் உரிமையாளர்கள் 94 பேரைப் பெரம்பலூர் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். 
    பெரம்பலூர் நேரு பொதுத் துறை சர்க்கரை ஆலை நிர்வாகத்தைக் கண்டித்து, பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் பெரம்பலூர் சர்க்கரை ஆலை கரும்பு உற்பத்தியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் என். அன்பழகன், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் டி.எஸ். சக்திவேல், கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் எம். ஞானமூர்த்தி ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    ஆர்ப்பாட்டத்தில், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சாமிநாதன் கமிட்டி பரிந்துரையை அமல்படுத்த வேண்டும்.  கரும்புக்கான கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்.
    பெரம்பலூர் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ. 50 கோடி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. 
    தொடர்ந்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாகச் சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடச் செல்ல முயன்றனர். மறுப்பு தெரிவித்ததால், போலீஸாரின் செயல்பாட்டைக் கண்டித்து புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
    இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலர் ஆர். ராஜா சிதம்பரம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க முன்னாள் மாவட்டத் தலைவர் அ. வேணுகோபால், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலர் ஏ.கே. ராஜேந்திரன் உள்ளிட்ட 94 பேரைப் போலீஸார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai