Enable Javscript for better performance
துப்புரவு பணியாளர்களுக்கு  டெங்கு விழிப்புணர்வு- Dinamani

சுடச்சுட

    

    தேசிய டெங்கு தினத்தையொட்டி,  பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்களுக்கு டெங்கு தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
    நிகழ்ச்சிக்கு, நகாரட்சி ஆணையர் வினோத் தலைமை வகித்தார். பொறியாளர் ராதா, மேலாளர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சம்பத், மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் அரவிந்தன் ஆகியோர் டெங்கு தடுப்பு முறைகள் குறித்துப் பேசினர். இதில், சுகாதார ஆய்வாளர்கள் கணேசன், பன்னீர்செல்வம் மற்றும் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai