Enable Javscript for better performance
108 அவசர சேவை: காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    தமிழக அரசு செயல்படுத்தி வரும் 108 அவசர சேவை ஆம்புலன்ஸில் பணிபுரிய ஓட்டுநர் மற்றும் மருத்துவப் பணியாளருக்கான நேர்க்காணல் மே 18 ஆம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.  மருத்துவப் பணியாளருக்கான தகுதிகள்: 30 வயதுக்குள்பட்ட ஆண், பெண் இரு பாலரும் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்ச கல்வி தகுதியாக இளநிலை பட்டப்படிப்புடன், பிளஸ் 2 வகுப்பில் அறிவியல் பாடம் படித்திருப்பது அவசியம். மாத ஊதியம் ரூ. 11,860. 
    ஓட்டுநருக்கான தகுதிகள்: 24 முதல் 35 வயதுக்குள்பட்ட, 162.5 செ.மீ. உயரத்துக்கு குறையாமலும், குறைந்தது 3 ஆண்டுகள் அனுபவம்  ஓட்டுநர் உரிமம் . 10 ஆம் வகுப்பு தேர்ச்சி. மாத ஊதியம் ரூ. 11,360.  மேலும், விவரங்களுக்கு 044 - 2888 8060, 2888 8075 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பயனடையலாம் எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருள்குமார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai