சைக்கிள் போட்டிகளில் வென்றோருக்கு பரிசளிப்பு

அண்ணாவின் 110-வது பிறந்த நாளினை முன்னிட்டு புதன்கிழமை சைக்கிள் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

அண்ணாவின் 110-வது பிறந்த நாளினை முன்னிட்டு புதன்கிழமை சைக்கிள் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மாவட்ட ஆட்சியர் வளாகம் எதிரே நடந்த போட்டிகளில்  10 பள்ளிகளைச் சேர்ந்த 65 மாணவர்களும், 75 மாணவிகளும் பங்கேற்றனர்.13 வயதுக்குள்பட்ட மாணவர்களுக்கான பிரிவில் புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் டி. விவேகானந்தன் முதலிடமும், தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளி மாணவர் எஸ். பிரியதர்ஷன் 2 ஆம் இடமும், ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யா பவன் பள்ளி மாணவர் எஸ். தேவ்நாத் 3 ஆம் இடமும் பெற்றனர். 
15 வயதுக்குள்பட்ட பிரிவில் தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் எஸ். அறிவுமதி முதலிடமும், கே. ராம்குமார் 2 ஆம் இடமும், ஆர். ரமேஷ் 3 ஆம் இடமும் பெற்றனர். 17 வயதுக்குள்பட்ட பிரிவில் தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளி மாணவர் பி. வேணுகோபால் முதலிடமும், ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாபவன் பள்ளி மாணவர் பி. யோகேஷ் 2 ஆம் இடமும், தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளி மாணவர் பி. மணிகண்டன் 3 ஆம் இடமும் பெற்றனர்.
13 வயதுக்குள்பட்ட மாணவிகளுக்கான பிரிவில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கே. நிதர்சனா முதலிடமும், வி. ஜமுனா 2 ஆம் இடமும், சிறுவாச்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ். தனலட்சுமி 3 ஆம் இடமும் பெற்றனர். 15 வயதுக்குள்பட்ட பிரிவில் சிறுவாச்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி பி. ஷோபனா முதலிடமும், பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பி. யோகலட்சுமி இரண்டாமிடமும், எம். புவனேஸ்வரி மூன்றாமிடமும் பெற்றனர். 
17 வயதுக்குள்பட்ட பிரிவில் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளிஞூஞூபெரம்பலூர் மாணவி எஸ். ராஜமாணிக்கம் முதலிடமும், புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஆர். சத்யபிரியா இரண்டாமிடமும், இ. சிந்துஜா மூன்றாமிடமும் பெற்றனர். 
தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு,  சான்றிதழ்களை வழங்கினார் மாவட்ட குற்ற ஆவணக்கூட ஆய்வாளர் ஆ. ரஞ்சனா.  
நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ம.  ராமசுப்பிரமணியராஜா, தடகளப் பயிற்றுநர் க. கோகிலா, உடற்கல்வி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com