பேரறிஞர் அண்ணா சிலைக்குஅரசியல் கட்சிகள் மாலை அணிவித்து மரியாதை

பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் பேரறிஞர் அண்ணா 110வது பிறந்த தினத்தை முன்னிட்டு


பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் பேரறிஞர் அண்ணா 110வது பிறந்த தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டன.
பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் புறநகர் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா,எம்ஜிஆர், பெரியார், ஜெயலலிதா ஆகியோரது சிலைகளுக்கு மாவட்டச் செயலாளரும், குன்னம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஆர்.டி. ராமச்சந்திரன் தலைமையிலும், பெரம்பலூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ஆர்.பி. மருதராஜா, சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பினர் மா.சந்திரகாசி, பெரம்பலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இரா.தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நகரச் செயலர் ஆர். ராஜபூபதி, மாவட்ட அணி செயலாளர்கள் எம்.என். ராஜாராம், மா.வீரபாண்டியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அரியலூர்: பேரறிஞர் அண்ணா 110 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அரியலூரில் உள்ளஅவரது சிலைக்கு அனைத்து கட்சியினர் சார்பில் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அதிமுக மாவட்டச் செயலாளரும், அரசு தலைமை கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் அரியலூர் ஒற்றுமைத் திடலில் இருந்து ஊர்வலமாகச் சென்று பேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.ஜயங்கொண்டம் சட்டப்பேரவை உறுப்பினர் ராமஜெயலிங்கம், கட்சி நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர்.
அமமுக சார்பில் நகரச் செயலர் தமிழரசன் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. எம்ஜிஆர் கழகம் சார்பில் அதன் பொருப்பாளர் கலைவாணன், திமுக சார்பில் மாவட்டச் செயலர் எஸ்.எஸ்.சிவசங்கரன், தேமுதிக சார்பில் மாவட்டச் செயலர் ராமஜெயவேல் தலைமையில் அந்தந்த கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை தெலுத்தினர்.
அதேபோல, ஜயங்கொண்டம், தா.பழூர், ஆண்டிமடம், செந்துறை, திருமானூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அண்ணா சிலைகள், திருவுருவ படத்திற்கு அனைத்துக் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com