அஞ்சல் வாக்களித்த காவல் துறையினர்

பெரம்பலூர் தொகுதியில் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படும் போலீஸார்,  தீயணைப்புப் படை

பெரம்பலூர் தொகுதியில் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படும் போலீஸார்,  தீயணைப்புப் படை மற்றும் ஊர்க்காவல் படையினர் வெள்ளிக்கிழமை அஞ்சல் வாக்குகளை செலுத்தினர்.
நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் எந்தவொரு வாக்காளரும் விடுபடக்கூடாது என்னும் குறிக்கோளுடன் தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 
அதனடிப்படையில், தேர்தல் பணிகளில் ஈடுபடும் போலீஸார், தீயணைப்பு படையினர், ஊர்க்காவல் படையினர்  தங்களது பணியாணையுடன் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் படிவம் 12 மற்றும் 12 - அ படிவத்துடன் தங்களது வாக்காளர் அடையாள அட்டை நகல், பாகம் மற்றும் வரிசை எண்ணை குறிப்பிட்டு விண்ணப்பித்து அஞ்சல் வாக்குகளை பெற்றனர். 
பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பெரம்பலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போலீஸார், தீயணைப்பு படையினர், ஊர்க்காவல் படையினர் மற்றும் அத்துறையை சேர்ந்த ஓட்டுநர்கள் என 441 பேர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 
இவர்கள் வாக்களிக்க பெரம்பலூர் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வாக்குப் பதிவு மையம் செயல்பட்டது. 
இதில், போலீஸார், தீயணைப்புப்படை வீரர்கள், ஊர்க்காவல் படையினர் ஆகியோர் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்குகளைச் செலுத்தினர். 
சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீஸார், தீயணைப்புப் படை மற்றும் ஊர்க்காவல் படையைச் சேர்ந்தவர்கள் குன்னம் வட்டம், மேலமாத்தூர் ராஜவிக்னேஷ் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குப் பதிவு மையத்தில் தங்களது வாக்குகளை சனிக்கிழமை பதிவு செய்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com