சுடச்சுட

    

    செல்பேசி கோபுரத்தில் இருந்து தவறிவிழுந்து இளைஞர் பலி

    By DIN  |   Published on : 16th April 2019 09:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், அகரம் சீகூர் கிராமத்தில் தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான செல்பேசி  கோபுரம் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இப்பணியில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாடசாமி (27) உள்ளிட்ட பலர் ஈடுபட்டுள்ளனர்.  இந்நிலையில், திங்கள்கிழமை காலை செல்பேசி கோபுரத்தின் மீது ஏறி பணியில் ஈடுபட்டிருந்த மாடசாமி நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். இதில், பலத்த காயமடைந்த அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த மங்களமேடு போலீஸார் நிகழ்விடத்துக்குச் சென்று, மாடசாமி உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai