தேர்தல் நாளில் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்

பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்தில் உள்ள நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு ஏப். 18 ஆம் தேதி சம்பளத்துடன்

பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்தில் உள்ள நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு ஏப். 18 ஆம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் பெரம்பலூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜே.ஏ. முஹமது யூசுப்.
இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
வரும் 18 ஆம் தெதி நடைபெறும் மக்களவைத் தேர்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை உறுதி செய்யும் வகையில், தகுதியுள்ள வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக, அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை, கடை, உணவு மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் அனைத்து விதமான தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர், பிற மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து பணியாற்றும் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மக்கள் பிரிதிநிதித்துவ சட்டப் பிரிவின் படி தேர்தல் நாளன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். தேர்தல் அன்று அனைத்து ஊழியர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும். 
இதை உறுதி செய்யும் வகையில் புகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 
இதுதொடர்பாக புகார்களை தெரிவிக்க பெரம்பலூர் தொழிலாளர் உதவி ஆணையர் முகமது யூசுப் (94438 45052) தொழிலாளர் துணை ஆய்வாளர் ஜெயராஜ் (97894 72234), தொழிலாளர் உதவி ஆய்வாளர் சாந்தி (78711 48291) முசிறி தொழிலாளர் உதவி ஆய்வளர் திவாகர் (96986 11336), அரியலூர் மாவட்டத்திலுள்ள உள்ளவர்கள் புகார் தெரிவிக்க அரியலூர் தொழிலாளர் உதவி ஆய்வாளர் குருநாதன் (96294 94492), அரியலூர் முத்திரை ஆய்வாளர் பா.த. ராஜா (79042 50037) ஆகியோரிடம் புகார் தெரிவிக்கலாம்.
அவ்வாறு விடுமுறை வழங்காவிட்டால் மேற்கண்ட தொலைபேசி எண்களில் புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, சம்பந்தப்பட்ட அனைத்து வியாபாரிகள் சங்கம் மற்றும் அனைத்து தொழிற்சங்கங்கள் ஆகியவை தனி கவனம் செலுத்தி, அனைத்து நிறுவன உரிமையாளர்களுக்கும் தவகல் தெரிவித்து தேர்தல் நாளன்று, அனைத்து ஊழியர்களுக்கும் விடுமுறை அளித்து 100 சதவீத வாக்கு பதிவு நடைபெற ஒத்துழைக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com