சுடச்சுட

  

  பணம் கொடுத்து வெல்லலாம் என்னும் எண்ணம் ஈடேறாது: தொல். திருமாவளவன்

  By DIN  |   Published on : 17th April 2019 05:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து வெற்றி பெற்றுவிடலாம் எனும் எண்ணம் ஈடேறாது என்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்.
  திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில், பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயகக் கட்சி வேட்பாளர் டி.ஆர். பாரிவேந்தரை ஆதரித்து, பெரம்பலூர் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரசாரத்தில் அவர் மேலும் பேசியது; 
  கடந்த 5 ஆண்டுகளில் இந்துகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி செய்த செய்த ஒரே நலத் திட்டம் பண மதிப்பிழப்புதான். பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் அதிமுகவுடன் அரசியல் பேரம் பேசி கூட்டணி வைத்துள்ளனர். பாஜக, அதிமுகவை மிரட்டிப் பணிய வைத்து கூட்டணி அமைத்துள்ளது. 
  எதிரணியினர் வாக்காளர்களுக்கு பணம் வழங்குகின்றனர். ஒரு வாக்குக்கு ரூ. 250 வீதம் வழங்குவதாக உறுதியான தகவல் கிடைத்துள்ளது.  இந்தத் தேர்தலில் பணத்தைக் கொடுத்து வாக்குகள் வாங்கி வெற்றி பெற்று விடலாம் என நினைப்போரின்  எண்ணம் ஈடேறாது. மக்கள் அவர்களுக்கு தக்க பாடம் புகட்டுவர். தமிழகத்தில் கஜா புயல் பாதிப்பு ஏற்பட்டபோது வராத மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோர், இப்போது உங்கள் முன்பு வாக்கு கேட்டு வந்து நிற்கிறார்கள். 
  மீண்டும் வேண்டாம் மோடி என்னும் ஒரே கொள்கையுடன் உருவாகியுள்ள கொள்கை முரண்பாடு இல்லாத மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர்களை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்றார் தொல். திருமவளவன்.  
  பிரசாரத்தின்போது  திமுக மாவட்டச் செயலர் சி. ராஜேந்திரன், காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் த. தமிழ்ச்செல்வன், ஐ.ஜே.கே. மாவட்டத் தலைவர் அன்பழகன், விசிக மாநில நிர்வாகி 
  இரா. கிட்டு, மாவட்டச் செயலர் சி. தமிழ்மாணிக்கம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
  ஜயங்கொண்டத்தில்...  அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் கடைவீதியில் உள்ள காந்தி பூங்கா முன் சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பிரசாரத்தில் ஈடுபட்டார். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai