சுடச்சுட

  

  வாக்குச்சாவடி அலுவலர்கள், நுண் பார்வையாளர்களுக்கு பணி ஒதுக்கீடு

  By DIN  |   Published on : 17th April 2019 05:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் நுண் பார்வையாளர்கள் கணினி மூலம் தேர்ந்தெடுக்கப்படும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
  பெரம்பலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் மஞ்சுநாத் பஜன்ட்ரி, தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வே. சாந்தா ஆகியோர் முன்னிலையில் சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்ற உள்ள நுண் பார்வையாளர்களுக்கான வாக்குச்சாவடி மையங்கள் கணினி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டன.  
  பெரம்பலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள 332 வாக்குச்சாவடிகள், குன்னம் பேரவைத் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள 320 வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடி அலுவலர்கள், வாக்குச்சாவடி அலுவலர் நிலைகளில் 3,159 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  
  மேலும், 1,200-க்கும் மேற்பட்ட வாக்காளர்களைக் கொண்ட வாக்குச்சாவடிகளில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு (நிலை-2) உதவிகரமாக இருப்பதற்காக பெரம்பலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 24, குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் 7 என மொத்தம் 31 வாக்குச்சாவடி அலுவலர்கள் (நிலை- 4) நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  
  பெரம்பலூரில் பதற்றமான 36 வாக்குச்சாவடிகளும், நெருக்கடியான 4 வாக்குச்சாவடிகளும், குன்னத்தில் பதற்றமான 47 வாக்குச்சாவடிகளும், நெருக்கடியான 1 வாக்குச்சாவடியும் என மொத்தம் 83 வாக்குச்சாவடிகள் பதற்றமானதாகவும், 5 வாக்குச்சாவடிகள் நெருக்கடியானவையாகவும் கண்டறியப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் பணியாற்ற நுண் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பணிபுரியும் வாக்குச்சாவடி மையங்கள் கணினி மூலம்  ஒதுக்கீடு செய்யப்பட்டன.   நிகழ்ச்சியில், மகளிர் திட்ட இயக்குநர் சு. தேவநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai