தனியார் நிறுவனங்களுக்கு தண்ணீர் விற்பனை தடுக்கக் கோரி மனு
By DIN | Published On : 23rd April 2019 08:47 AM | Last Updated : 23rd April 2019 08:47 AM | அ+அ அ- |

தனியார் நிறுவனங்களுக்கு தண்ணீர் விற்பனை செய்வதை தடுக்கக் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டத்துக்குள்பட்ட நாரணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சிலர் தங்களுக்கு சொந்தமான விவசாய கிணற்றில் ஆழ்துளைக் கிணறு அமைத்து, அதிலிருந்து கிடைக்கும் தண்ணீரை தனியார் நிறுவனங்களுக்கு லாரிகள் மூலம் விற்று வருகின்றனராம். இதனால், அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைவதோடு, விவசாய நிலங்களுக்கும், பொதுமக்களுக்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் சூழல் நிலவுகிறதாம். இதுகுறித்து சம்பந்தப்பட்ட நபர்களிடம் முறையிட்டும் லாரிகள் மூலம் தண்ணீர் விற்பதை நிறுத்தவில்லையாம். தனியார் நிறுவனங்களுக்கு தண்ணீர் விற்பனை செய்வதை தடுக்க வேண்டுமென, அந்த கிராமத்தைச் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தனர்.