முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்
தீரன் சின்னமலை நினைவு தினம் அனுசரிப்பு
By DIN | Published On : 04th August 2019 03:39 AM | Last Updated : 04th August 2019 03:39 AM | அ+அ அ- |

பெரம்பலூரில் மாவீரன் தீரன் சின்னமலை 214 -வது நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
பெரம்பலூர் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள காந்தி சிலை எதிரே, சுதந்திரப் போராட்ட வீரர், தீரன் சின்னமலையின் 214 -வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தீரன் சின்னமலை உருவ படத்துக்கு மாவட்ட செயலர் சிவக்குமார் தலைமையில் அக்கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில், மாவட்ட பொருளாளர் மோகனசுந்தரம், மாவட்ட இணைச் செயலர் பிரகதீஸ், மாவட்ட துணை செயலர் சின்னதம்பி, தீரன்படை செயலர் மிலன், கிளை நிர்வாகிகள் சீனிவாசன், தட்சிணாமூர்த்தி, ராஜேஷ்குமார், ராஜி உள்பட பலர் பங்கேற்றனர்.