முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்
தீவன அபிவிருத்தி திட்டத்தில் பயன்பெற அழைப்பு
By DIN | Published On : 04th August 2019 03:39 AM | Last Updated : 04th August 2019 03:39 AM | அ+அ அ- |

பெரம்பலூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் 2019- 20 ஆம் ஆண்டுக்கு செயல்படுத்தப்படும் கூடுதல் தீவன அபிவிருத்தித் திட்டத்தில் பயன்பெற விவசாயிகள், கால்நடை வளர்ப்போருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் கறவை மாடுகளில் பால் உற்பத்தித்திறன் மற்றும் இனப்பெருக்கத்தை அதிகரிப்பதற்கு வசதியாக பசுந்தீவன உற்பத்தியை பெருக்குவதற்கு கூடுதல் தீவன அபிவிருத்தித் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி, விவசாயிகளுக்கு தீவனச்சோளம் மற்றும் தட்டைப்பயிறு வளர்க்கும் திட்டத்தின் கீழ் 500 ஏக்கர் நிலப்பரப்பில் சாகுபடி செய்ய ஒவ்வொரு 0.25 ஏக்கர் (25 சென்ட்) நிலப்பரப்பில் பயிரிட்டு வளர்க்க தேவைப்படும் 3 கிலோ தரமான தீவன சோள விதை, 1 கிலோ தட்டைப்பயிறு விதைகளும் (1 ஏக்கருக்கு 12 கிலோ சோள விதைகள் மற்றும் 4 கிலோ தட்டைப்பயிர் விதைகள்) மற்றும் அவற்றை பயிரிட தேவையான உரங்களும் (யூரியா பொட்டாஷ் மற்றும் சூப்பர் பாஸ்பேட்) வழங்கிட பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இத்திட்டங்களில் பயன்பெற விரும்பும் கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் தங்களது பகுதியில் உள்ள கால்நடை உதவி மருத்துவரை அணுகி விண்ணப்பித்து பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என ஆட்சியர் வே. சாந்தா தெரிவித்துள்ளார்.