முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்
மாற்றுத்திறனாளி மாணவர்கள்கல்வி உதவித்தொகை பெறலாம்
By DIN | Published On : 04th August 2019 03:39 AM | Last Updated : 04th August 2019 03:39 AM | அ+அ அ- |

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்தினாளி மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கான 2019 - 20 ஆம் நிதியாண்டுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தில், பள்ளி, கல்லூரி, தொழிற்கல்வி மற்றும் மருத்துவம் பயில்வோருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை ரூ. 1,000, 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை ரூ. 3,000, 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ரூ. 4,000, இளங்கலை பட்டப்படிப்புக்கு ரூ. 6,000, முதுகலை பட்டப்படிப்பு, தொழில்நுட்பக் கல்வி, மருத்துவம் மற்றும் பொறியியல் தொழில் கல்விக்கு ரூ. 7,000 கல்வி உதவித்தொகையாக ஓராண்டுக்கு வழங்கப்படுகிறது.
மேலும் பார்வையற்ற மாணவ, மாணவிகளுக்கான வாசிப்பாளர் உதவித்தொகையாக 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ரூ. 3,000, இளங்கலை பட்டப்படிப்புக்கு ரூ. 5,000, முதுகலை பட்டப்படிப்பு மற்றும் தொழில்நுட்பக் கல்விக்கு ரூ. 6,000 வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் கடந்த கல்வியாண்டின் இறுதித் தேர்வில் குறைந்த பட்சமாக 40 சதவிதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
வேறு ஏதேனும் கல்வி உதவித்தொகை பெற்றிருத்தல் கூடாது. விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியயர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில்ஆக. 31 ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.