பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தல்

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டுமென அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டுமென அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பெரம்பலூரில் அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் 3-ஆவது மாவட்ட மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் மாயவேலு தலைமை வகித்தார். சங்கப் பொறுப்பாளர்கள் இளவரசன், நீலமேகம், பரமசிவம், கி. ஆளவந்தார், ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் ப. குமரி ஆனந்தன் மாநாட்டைத் தொடக்கி வைத்துப் பேசினார். 
ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலர் முருகேசன் வேலை அறிக்கையும், மாவட்டப் பொருளாளர் ராஜேந்திரன் நிதிநிலை அறிக்கையும் வாசித்தனர்.  
இதில், ஓய்வுபெற்ற ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் தங்கவேலு, மின்சார வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பு மாவட்டச் செயலர் கணேசன், மாநிலச் செயலர் ஜீவானந்தம் சங்கச் செயல்பாடுகள், பணிகள் குறித்து விளக்கிப் பேசினர். 
மாநாட்டில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊதியக் குழுவின் 21 மாத நிலுவைத் தொகையை வழங்கிட வேண்டும்.
 மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 
முன்னதாக, மாவட்ட துணைத் தலைவர் மகேஸ்வரன் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் பெரியசாமி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com