சுடச்சுட

  

  சுதந்திர தினத்தை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக் கடைகளுக்கும் வியாழக்கிழமை (ஆக. 15) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா வெளியிட்ட செய்திக் குறிப்பு:  
  பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக் கடைகள், அதனுடன் இணைக்கப்பட்ட மது அருந்தும் கூடங்கள், பொழுதுபோக்கு மனமகிழ் மன்றம் போன்ற கிளப்களில் செயல்படும் மதுக்கூடங்கள், நட்சத்திர உணவகங்களில் செயல்படும் மதுக்கூடங்கள், தமிழ்நாடு மற்றும் அயல்நாட்டு மது வகைகள் விற்கும் கடைகள் ஆகியவற்றுக்கு சுதந்திர தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை (ஆக. 15) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே, விதிகள் மீறி மது விற்போர் மீது சட்ட விதிகளின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
  அரியலூர்: சுதந்திர தினத்தையொட்டி அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மது அருந்தும் கூடங்கள் அனைத்தும் வியாழக்கிழமை (ஆக.15) விடுமுறை தினமாக அறிவிக்கப்படுகிறது என அரியலூர் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai