சுடச்சுட

  

  பெரம்பலூரில், அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) ஹரே கிருஷ்ண சத் சங்கம் சார்பில், ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி விழா மகா உற்ஸவம் ஆக. 23- ஆம் தேதி தொடங்குகிறது.  
  பெரம்பலூர் மேரிபுரம் பிரதான சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 23 ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் கிருஷ்ணலீலா உபன்யாசம், மகா ஆரத்தி, கிருஷ்ண அவதார நிகழ்ச்சி மற்றும் அஷ்ட லட்சுமி கலசங்களுக்கு 1,008 புனித தீர்த்தங்களை கொண்டு அபிஷேகம் நடைபெறுகிறது.  
  தொடர்ந்து, செஞ்சேரியில் உள்ள ஹரே கிருஷ்ண நிலத்தில் 24, 25 ஆகிய தேதிகளில் நிகழ்வுகள் நடைபெறுகின்றன. 
  24- ஆம் தேதி காலை 8 மணிக்கு ஸ்ரீமத் பாகவதம் , 10.30 மணிக்கு ஹரிநாம சங்கீர்த்தனம், பிற்பகல் 12 மணிக்கு கிருஷ்ணலீலா உபன்யாசம் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 
  மாலை 5.30 மணிக்கு மகா அபிஷேகம், 6.30 மணிக்கு கலை நிகழ்ச்சிகள், இரவு 7 மணிக்கு கிருஷ்ண அவதாரம் நிகழ்ச்சி மற்றும் 8.30 மணிக்கு மகா ஆரத்தி நிகழ்வுகள் நடைபெற உள்ளன.
   25 ஆம் தேதி காலை 5.30 மணிக்கு மங்கள ஆரத்தியுடன் தொடங்கி , பிற்பகல் 1 மணி வரை ஸ்ரீல பிரபுபாதர் லீலா உபன்யாசம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை இஸ்கான் அமைப்பின், பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளர் ஜெகதானந்த சைதன்யதாஸா மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் செய்துவருகின்றனர். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai