சுடச்சுட

  

  பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வணிகர்கள், தங்களது எடையளவுகளை முத்திரையிட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
  இதுகுறித்து பெரம்பலூர் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:  
  பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில், மாவட்ட விளையாட்டு மைதானம் அருகிலுள்ள தொழிலாளர் துறை அலுவலகத்தில் எடையளவு முத்திரையிடும் பணி ஆக. 31 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வணிகர்கள் தாங்கள் பயன்படுத்தும் மின்னணுத் தராசுகள், மேடை தராசுகள், மேஜை தராசுகள், விட்ட தராசுகள், எடைக் கற்கள் மற்றும் அளவைகளை முகாமுக்கு உரிய ஆவணங்களுடன் வந்து, 
  தங்களது எடையளவு கருவிகளை மறு முத்திரையிட்டு பயன்படுத்திக் கொள்ளலாம்.  மறு முத்திரையிடாமல் எடைளயவு கருவிகளைப் பயன்படுத்தினால் சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ், தொழிலாளர் துறை அலுவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டு ரூ. 5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.  
  எனவே, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வணிகர்கள் தங்களது எடையளவுகளுக்கு மறு முத்திரையிட்டுக்கொள்ள வேண்டும்.                                                 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai