சுடச்சுட

  

  களரம்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில்  , ஹோமியோபதி மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
  இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகத்தின் தமிழ்நாடு அரசு பிரிவு, பெரம்பலூர் மாவட்ட சித்த மருத்துவத்துறை சார்பில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
  நிகழ்வுக்குப் பள்ளித் தலைமையாசிரியர் செ. சுப்பிரமணியன் தலைமை வகித்தார். பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனை ஹோமியோபதி மருத்துவ அலுவலர் ராகுல் பல்வேறு நோய்களுக்கு ஹோமியோபதி மருத்துவத்தில் குணப்படுத்தும் முறைகள் குறித்து பேசினார்.  ஆசிரியர்கள், பயிற்சி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
  முன்னதாக, முதுநிலை ஆசிரியர் த. மாயகிருஷ்ணன் வரவேற்றார். நிறைவில்,ஆசிரியர் இ. ராஜேந்திரன் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai