சுடச்சுட

  

  பெரம்பலூர் நகரில் செவ்வாய்க்கிழமை இரவு 78 மி.மீ. மழை பெய்தது. 
  பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் வெயிலின் தாக்கமும் சற்று குறைந்து இருந்தது.
  இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு மாவட்டத்தின் ஒரு சில கிராமங்களில் பரவலாக மழை பெய்தது. அதன்படி, பெரம்பலூரில் - 78 மி.மீ, வேப்பந்தட்டையில் 34 மி.மீ, தழுதாழையில்- 12 மி.மீ, கிருஷ்ணாபுரம், புதுவேட்டக்குடியில் தலா 3 மி.மீ என மொத்தம் 130 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.
  செட்டிக்குளம், பாடாலூர், அகரம் சிகூர், லப்பைக்குடிகாடு, எறையூர், வி.களத்தூர் ஆகிய பகுதிகளில் ஒரு மில்லி மீட்டர் கூட மழை பொழியவில்லை. 
  இதனால் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள், மானாவாரி சாகுபடிக்காக தங்களது விளை நிலங்களை உழுது மழைக்காகக் காத்திருக்கின்றனர். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai