சுடச்சுட

  

  நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும், மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காததால், தற்கொலை செய்துகொண்ட மாணவியின் குடும்பத்துக்கு ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்க பரிந்துரை செய்யக்கோரி புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.
  இதுகுறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் வீ. ஞானசேகரன் தலைமையிலான அக்கட்சியினர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராஜராஜனிடம் அளித்த மனு:பெரம்பலூர் தீரன் நகரைச் சேர்ந்த அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற நடத்துநர் செல்வராஜ் மகள் கீர்த்தனா (19). இவர்  2018-இல் பிளஸ் 2 அரசுப் பொதுத்தேர்வில் 1200-க்கு 1053 மதிப்பெண்கள் பெற்றார். அப்போது, நீட் தேர்வு எழுதி குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைக்கவில்லை. தொடர்ந்து, 2019-இல் நீட் தேர்வு எழுதி, 384 மதிப்பெண்கள் பெற்று அரசு மருத்துவக் கல்லூரியில் பயில விண்ணப்பித்திருந்தார். 
  ஆனால், கலந்தாய்வில் பங்கேற்பதற்கான அழைப்புக் கடிதம் கிடைக்காததால் மனமுடைந்த மாணவி கீர்த்தனா கடந்த 1 -ஆம் தேதி அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.  கீர்த்தனாவின் தந்தை செல்வராஜ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே, தனது மகளை இழந்து தவிக்கும் அவரது பெற்றோருக்கு நிவாரணத் தொகையாக ரூ. 25 லட்சமும், மாணவியின் சகோதரருக்கு அரசுப் பணியும் வழங்க தமிழக அரசுக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் பரிந்துரை செய்யவேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.                                                   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai