சுடச்சுட

  

  தென்மேற்கு பருவக் காற்றால் மின்தடை ஏற்படுவதை தடுக்க ,மின் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென  தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. 
  பெரம்பலூர் மின் வாரியச்செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைகேட்பு நாள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, பெரம்பலூர் கோட்டச் செயற்பொறியாளர் (பொது) சேகர் தலைமை வகித்தார். 
  கூட்டத்தில், தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலர் ஆர். ராஜாசிதம்பரம் தலைமையிலான விவசாயிகள் அளித்த கோரிக்கை மனு: பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 1989-90 ஆம் ஆண்டுகளில் மின் இணைப்புக் கோரி பதிவுசெய்து காத்திருக்கும் 438 விவசாயிகளுக்கு இதுவரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை. காலம் தாழ்த்தாமல், அவர்களுக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பலத்த சூறாவளி காற்றால் கடந்த ஜூன் மாதம், வேப்பந்தட்டை வட்டம்,  தழுதாழை, அரும்பாவூர், அ.மேட்டூர், மலையாளப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மின் கம்பங்கள் சாய்ந்து, கம்பிகள் அறுந்து ஆபத்தான நிலையிலும் உள்ளது.  
   இவற்றை மின் வாரியத் துறையினர் சீரமைக்க வேண்டும் என நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஏற்கனவே புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.  எனவே, இவற்றை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
  தற்போது தென்மேற்கு பருவக்காற்று வீசி வரும் சூழலில், சூறைக்காற்று அதிகரிக்கும்போது மின் கம்பிகள்  உரசி ஏற்படும் மின் தடையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மின் மாற்றிகளில் பழுது ஏற்படும் போது, காலதாமதம் ஏற்படாமல் புகார்களை பதிவு செய்யவும், பதிவு செய்த 2 நாள்களில் மின் மாற்றிகளை சரி செய்து கொடுக்க வேண்டும்  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
   நுகர்வோரிடமிருந்து பெறப்பட்ட 14 மனுக்கள் மீது பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என செயற்பொறியாளர் (பொது) சேகர் தெரிவித்தார். கூட்டத்தில் உதவிச் செயற்பொறியாளர்கள் சதாசிவம், சுப்பிரமணியம், முத்தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai