பெரம்பலூர் ஆட்சியரகத்தில் மனுதாரர்கள் தர்னா

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில், அளிக்கப்பட்ட மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளைக் கண்டித்து மனுதாரர்கள் தர்னா, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்டம், மாவட்ட வருவாய் அலுலர் ராஜேந்திரன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், அடிப்படை வசதிகள் கோரி அளிக்கும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளைக் கண்டித்து சமூக ஆர்வலர் முகமது இக்பால் என்பவர் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தரையில் அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை, கூட்டரங்கில் இருந்த அதிகாரிகள் சமாதானப்படுத்தி அழைத்துச் சென்று மனுக்களைப் பெற்றுக் கொண்டனர். 
இதேபோல், வேப்பந்தட்டை வட்டம், அன்னமங்கலத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் அருளப்பன் (73) என்பவர் தனது தந்தை பெயரிலான நிலத்தை வேறொருவருக்கு பட்டா மாற்றியது குறித்த மனு மீது கடந்த 8 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளைக் கண்டித்து, ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்ட அரங்கில் உயர் அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.  இதையறிந்த போலீஸார் அவரை சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றனர். ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்களில் அடுத்தடுத்து மனுதாரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com