Enable Javscript for better performance
பெரம்பலூர் அருகே ஆற்றில் மூழ்கி சிறுமிகள் இருவர் பலி- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் அருகே ஆற்றில் மூழ்கி சிறுமிகள் இருவர் பலி

    By DIN  |   Published on : 24th August 2019 10:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகே வெள்ளிக்கிழமை மாலை மருதையாற்றில் மூழ்கி சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர்.
    ஆலத்தூர் வட்டம், சாத்தனூர் குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் செல்வராஜ் மகள் மஞ்சுளா (12), ராஜா மகள் சீதா (12), கந்தசாமி மகள் பிரியா (13). இவர்கள் மூவரும் தோழிகள். மஞ்சுளா, சீதா ஆகியோர் 7ஆம் வகுப்பு படித்து வந்தனர். பிரியா 8ஆம் வகுப்பு படித்து வருகிறார்.  இந்நிலையில், வெள்ளிக்கிழமை விடுமுறை நாள் என்பதால் மேற்கண்ட மூவரும் அதே கிராமத்தில் ஓடும் மருதையாற்றில் குளிப்பதற்காக சென்றனர். அப்போது, ஆற்றில் இறங்கி குளித்துக்கொண்டிருந்த மஞ்சுளா, சீதா ஆகிய இருவரும் நீரில் மூழ்கி தத்தளித்தனர். கரையில் நின்று கொண்டிருந்த பிரியா ஊருக்குள் சென்று தகவல் அளித்து பெற்றோர்களை சம்பவ இடத்துக்கு அழைத்து வந்தார். ஆனால், மாணவிகள் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், மருவத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai