Enable Javscript for better performance
மதிப்புக் கூட்டும் இயந்திர மையங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    மதிப்புக் கூட்டும் இயந்திர மையங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம்

    By DIN  |   Published on : 24th August 2019 08:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் மாவட்டத்தில் நீடித்த மானாவாரி இயக்கத்தின் கீழ் வேளாண் விளைபொருள்கள் மதிப்புக் கூட்டும் இயந்திர மையங்கள் மானியத்தில் அமைக்க விண்ணப்பிக்கலாம். 
    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
    விவசாயிகள் வேளாண் விளைபொருள்களை மதிப்புக்கூட்டி சந்தையில் விற்பனைக்கு கொண்டுவந்து அதிக லாபம் பெறும் வகையில், உழவர் உற்பத்தியாளர் அமைப்பு அல்லது கூட்டுப் பண்ணைய திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு, அந்தந்த தொகுதிகளில் உள்ள பயிர்களுக்கான விளைபொருள்களுக்கான மதிப்பு கூட்டும் இயந்திரங்கள் மையம் அமைக்க 75 சதவீத மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ. 10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது.  வேளாண் விளைபொருள்களை சுத்தப்படுத்தி, தரம் பிரித்து விற்பனைக்கேற்ற வகையில் பேக்கிங் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்கான மதிப்புக் கூட்டும் இயந்திரங்களை நிறுவுவதற்கும், பொருள்களை வைப்பதற்கும் உரிய இடவசதி, மின்சார இணைப்பு இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
    மதிப்புக் கூட்டும் இயந்திர மையம் அமைப்பதற்கு ஆர்வமுள்ளவர்கள் சம்பந்தப்பட்ட மானாவாரி தொகுப்பு மேம்பாட்டு குழு பரிந்துரையுடன், விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளருக்கு அனுப்ப வேண்டும்.
    விண்ணப்பித்துள்ள ஆவணங்களை அதிகாரிகள் சரிபார்த்த பின்னர் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் தலைமையிலான குழு ஒப்புதல் பெறப்படும். பின்னர், உதவி செயற்பொறியாளரால் மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள் வழங்க பணி ஆணை வழங்கப்படும்.  இத்திட்டத்தின் கீழ் பயன்பெற ஆர்வமுள்ள உழவர் உற்பத்தியாளர் அமைப்பு மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழு தங்கள் விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட தொகுப்பு மேம்பாட்டு குழுவுக்கு அளிக்கவேண்டும்.
    மேலும் விவரங்களுக்கு, அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்கள் அல்லது ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் அலுவலகம் அல்லது ரோவர் கல்லூரி பின்புறம் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai