பச்சையம்மன் சமேத மன்னாத சுவாமி கோயிலில் பூக்குழி திருவிழா

குன்னம் வட்டம், கீழப்புலியூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு பச்சையம்மன் சமேத மன்னாத சுவாமி கோயிலில் பூக்குழி இறங்கும் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

குன்னம் வட்டம், கீழப்புலியூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு பச்சையம்மன் சமேத மன்னாத சுவாமி கோயிலில் பூக்குழி இறங்கும் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
விழாவையொட்டி, வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு அருள்மிகு பச்சையம்மன் சமேத மன்னாத சுவாமிக்கு திருக்கல்யாணமும், மாலை 3 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து, மாலை 4 மணிக்கு கோயில் வளாகத்தில் தீ மிதி திருவிழா நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்காக தீ மிதித்தனர். இந்நிகழ்ச்சியில், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இதில், இந்து சமய அறநிலையத்துறை திருச்சி இணை ஆணையர் அர. சுதர்சன், அரியலூர் உதவி ஆணையர் சி. கருணாநிதி, கோயில் தக்கார் த. ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து, சனிக்கிழமை திருத்தேர் மலையைச்சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com