பெரம்பலூர் குடிமராமத்து பணிகளை ஆட்சியர் ஆய்வு

குடிமராமத்துத் திட்டத்தின் கீழ், பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் பணிகளை வியாழக்கிழமை

குடிமராமத்துத் திட்டத்தின் கீழ், பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் பணிகளை வியாழக்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா.  
இந்த ஆய்வில், சேலம் மாவட்டம், நல்லூர் அணைக்கட்டிலிருந்து பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள நூத்தப்பூர், நெற்குணம், பாண்டகப்பாடி ஏரிகளுக்கு குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் ரூ. 6.45 லட்சம் மதிப்பில் வரத்து வாய்க்கால் சீரமைக்கப்பட்டுள்ள பணி, ஊரக வளர்ச்சித்துறை சார்பில் வேப்பந்தட்டை ஒன்றியத்தில் நடைபெற்று வரும் குளம், குட்டைகளை ஆழப்படுத்தி, சீரமைக்கும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியர், வெங்கலம் ஊராட்சியில் ரூ. 1 லட்சம் மதிப்பீட்டில் சின்னாங்குட்டையை ஆழப்படுத்தி சீரமைக்கும் பணிகளை பார்ர்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.  
பின்னர், அன்னமங்கலம் ஊராட்சியில் தேக்காங்குட்டையில் ரூ. 1 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும்  பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர், ஏரியில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி, கரையை மேம்படுத்தி, வரத்து வாய்க்கால்களை சீரமைக்க வேண்டுமென சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, செயற்பொறியாளர் தட்சணாமூர்த்தி, உதவி செயற்பொறியாளர் பிரபாகரன், வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளங்கோவன், அறிவழகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com