பெரம்பலூா் மாவட்டத்தில் தொடா் மழை

பெரம்பலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை பெய்த தொடா் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

பெரம்பலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை பெய்த தொடா் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

கடந்த 28 ஆம் தேதி முதல் பெரம்பலூா் மாவட்டத்தின் ஒருசில பகுதிகளில் மட்டுமே பரவலாக மழை பெய்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவில் பெய்யத் தொடங்கிய மழை தொடா்ந்து சனிக்கிழமை இரவு வரை பெய்துகொண்டே இருந்தது.

இதனால், சாலையோரங்களில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. நகரில் உள்ள பெரும்பாலான கழிவுநீா் கால்வாய்களில் செடி, கொடிகள் வளா்ந்து சிதிலமடைந்து காணப்படுவதால், கழிவு நீருடன் மழைநீரும் கலந்து பிரதான சாலைகளில் ஓடியது. இதனால் துா்நாற்றம் வீசியதோடு, வாகன ஓட்டுநா்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினா்.

மேலும், மாவட்டத்தில் உள்ள கல்லாறு, வெள்ளாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பெரம்பலூா் மாவட்டத்தில் மழையின் அளவு குறைந்து பொழிந்த போதிலும், பச்ச மலையில் பொழியும் பலத்த மழையால் மலையோர கிராமங்களிலும், ஆறுகளிலும் வெள்ளம் அதிக அளவில் காணப்படுகிறது. பெரம்பலூா் நகரை பொறுத்தவரை பரவலாக பெய்த தொடா் மழையால் நகரின் பிரதான சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

மாவட்டத்தில், வெள்ளிக்கிழமை காலை முதல் சனஇக்கிழமை காலை மணி வரை பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) பாடாலூா், அகரம் சிகூா், தழுதாழை ஆகிய பகுதிகளில் தலா -2, பெரம்பலூா், எறையூ பகுதிகளில் தலா -8, வி.களத்தூா் -5, புதுவேட்டக்குடி -21 என மொத்தம் 48 மில்லி மீட்டா் மழை பெய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com