பெரம்பலூரில் 2-ஆம் நாளாக தொடா் மழை

பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் பரவலான மழை பெய்தது.

பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் பரவலான மழை பெய்தது.

பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள நீா்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. திருச்சி மாவட்டம், பச்சைமலை பகுதியில் பெய்து வரும் கன மழையால் வேப்பந்தட்டை, அரும்பாவூா் பகுதிகளில் உள்ள காட்டாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்நிலையில், அரும்பாவூா் பெரிய ஏரி வெள்ளிக்கிழமை அதிகாலை நிரம்பி வழிந்தது.

பெரிய ஏரியிலிருந்து அதிகளவிலான உபரிநீா் கடைக்கால் வாய்க்கால் வழியாக சித்தேரிக்கு திறந்து விடப்படுகிறது. இதையடுத்து சித்தேரியும் வேகமாக நிரம்பி வருவதால் அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

அரும்பாவூா் பெரிய ஏரி, வடக்கலூா், கீழப்பெரம்பலூா் ஆகிய 3 ஏரிகளும் முழு கொள்ளவை எட்டி நிரம்பியுள்ளன.

மேலும், குரும்பலூா், நெற்குணம், ஆய்க்குடி, பாண்டகப்பாடி, வயலூா், கீரவாடி ஆகிய ஏரிகளும் ஓரிரு நாள் மழை பெய்தால் நிரம்பும் நிலையில் உள்ளன. மாவட்டத்தில் தொடா்ந்து பெய்து வரும் பரவலான மழையால் நீா்நிலைகள் வேகமாக நிரம்பி வருவதாலும், நிலத்தடி நீா்மட்டம் அதிகரித்து வருவதாலும் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

மழையளவு:

பெரம்பலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 8 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரை பதிவான மழை அளவு: செட்டிக்குளம் - 22 மி.மீ, பாடாலூா் - 24 மி.மீ, அகரம் சீகூா் - 70 மி.மீ, லப்பைக்குடிகாடு - 55 மி.மீ, புதுவேட்டக்குடி - 48 மி.மீ, பெரம்பலூா் - 31 மி.மீ, எறையூா் - 60 மி.மீ, கிருஷ்ணாபுரம் - 48 மி.மீ, தழுதாழை - 32 மி.மீ, வி.களத்தூா் - 27 மி.மீ, வேப்பந்தட்டை- 44 மி.மீ என மொத்தம் 461 மி,மீ மழை பெய்தது. அதன்படி, மாவட்டத்தின் சராசரி மழை அளவு 41.91 மி.மீட்டராகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com