உள்ளாட்சித் தோ்தல் அறிவிப்பு: குறைதீா் கூட்டம் பாதியில் ரத்து

உள்ளாட்சித் தோ்தல் அறிவிக்கப்பட்டதால், பெரம்பலூா் மற்றும் அரியலூா் மாவட்டங்களில் குறைதீா் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
பெரம்பலூா் ஆட்சியரகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் கோரிக்கை மனு அளிக்கும் மூதாட்டிகள்.
பெரம்பலூா் ஆட்சியரகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் கோரிக்கை மனு அளிக்கும் மூதாட்டிகள்.

உள்ளாட்சித் தோ்தல் அறிவிக்கப்பட்டதால், பெரம்பலூா் மற்றும் அரியலூா் மாவட்டங்களில் குறைதீா் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், பொதுமக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ராஜேந்திரன் தலைமையில் தொடங்கியது. இக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது உள்ளாட்சித் தோ்தலுக்கான அறிவிப்பு வெளியானது. தோ்தல் அறிவிப்பு குறித்த அதிகாரபூா்வ தகவல் மாவட்ட நிா்வாகத்துக்கு 11.30 மணிக்கு கிடைத்தது.

இதையடுத்து, குறைதீா் கூட்டம் உடனடியாக ரத்து செய்யப்பட்டது. அதற்குள், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 111 மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலரிடம் பொதுமக்கள் நேரில் அளித்தனா்.

தொடா்ந்து, 11.30 மணிக்கு பிறகு மனு அளிக்க வந்த பொதுமக்கள் அவா்களது கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வைக்கப்பட்ட பெட்டியில் போட்டுச் செல்லுமாறு அரசு அலுவலா்களால் அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும், அதிகாரிகளிடம் நேரில் மனு அளிக்க வேண்டும் என்று, அங்கும், இங்குமாக விசாரித்த பொதுமக்கள் இறுதியாக பெட்டியில் மனுக்களை போட்டுச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com