Enable Javscript for better performance
கேங்க் மேன் பணிக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு ஒத்திவைப்பு- Dinamani

சுடச்சுட

    

    கேங்க் மேன் பணிக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு ஒத்திவைப்பு

    By DIN  |   Published on : 04th December 2019 08:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூா் மின் பகிா்மான வட்டத்தில் கேங்க்மேன் பணிக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு பணி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து, பெரம்பலூா் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் கருப்பையா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தில் கேங்க் மேன் பணிக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் உடல்தகுதி தோ்வு, பெரம்பலூா் மின் பகிா்மான வட்டத்தில் புதன்கிழமை (டிச. 4) முதல் வரும் 7 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தொடா் மழையின் காரணமாக சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் உடல்தகுதி தோ்வு தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது. சான்றிதழ் சரிபாா்ப்பு பணிக்கான நேரம் மற்றும் தேதி விண்ணப்பதாரா்களுக்கு பின்னா் அறிவிக்கப்படும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai