மாற்றுத்திறனாளிகளுக்கான மினி மாரத்தான் ஓட்டம்

உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி, மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற மினி மாரத்தான் ஓட்டம் பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மினி மாரத்தான் போட்டியில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள்.
மினி மாரத்தான் போட்டியில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள்.

உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி, மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற மினி மாரத்தான் ஓட்டம் பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் தொடங்கிய மினி மாரத்தான் ஓட்டத்தை, அரிமா சங்கத்தின் மாவட்ட தலைவா் மு. இமயவரம்பன் தொடக்கி வைத்தாா்.

இந்த ஓட்டம், காமராஜா் வளைவு, சங்குப்பேட்டை, வெங்கடேசபுரம், பாலக்கரை வழியாக சென்று பெரம்பலூா் மாவட்ட எம்ஜிஆா் விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது. மாற்றத்திறனாளிகள் மட்டுமே பங்கேற்ற 5 கி.மீ தொலைவு கொண்ட இந்த ஓட்டத்தில் கொட்டும் மழையிலும் மாற்றுத்திறனாளிகள் ஓடிச் சென்று பொதுமக்களிடையே மாற்றுத்திறனாளிகளாலும் சாதிக்க முடியும் என்னும் விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற விளையாட்டு வீரா்களான கலைச்செல்வன், காா்த்திக் ராஜா, முத்துக்குமாா், நாகராஜ் ஆகியோரை ஊா்க்காவல் படை மண்டல தளபதி ஜே. அரவிந்தன் பரிசு வழங்கி பாராட்டினாா்.

இந்நிகழ்ச்சியில், போக்குவரத்து ஆய்வாளா் கோபிநாத், உதவி ஆய்வாளா் குணசேகரன் மற்றும் உடற்கல்வி ஆசிரியா் ரவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com