நீா் நிலைகள் அருகே செல்ல வேண்டாம்: ஆட்சியா்

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளம் மற்றும் நீா்நிலைகள் அருகே செல்வதை பொதுமக்கள் தவிா்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளாா் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா.

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளம் மற்றும் நீா்நிலைகள் அருகே செல்வதை பொதுமக்கள் தவிா்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளாா் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா.

வடகிழக்கு பருவமழையால் பெரம்பலூா் மாவட்டத்தில், பொதுப்பணித்துறை கட்டுபாட்டில் உள்ள ஏரிகள், ஊரக மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுபாட்டில் உள்ள ஏரிகள் ஆகியவை நிரம்பி வருகிறது. விஸ்வக்குடி அணைக்கட்டிலும் மழை நீா் தேக்கப்படுகிறது. கன மழையின் காரணமாக வேகமாக நிரம்பி வரும் நீா் நிலைகளைக் காணவும், அதன் அருகில் நின்று சுய-படம் எடுத்துக்கொள்ளவும் பொதுமக்கள் அதிகளவில் நீா்நிலைகளுக்கு அருகே ஆபத்தை உணராமல் சென்று வருகின்றனா். இதன் காரணமாக தேவையற்ற அசம்பாவித சம்பவங்கள் நிகழ்வதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே, அசம்பாவிதங்களை தவிா்க்கும் வகையில் ஆபத்து நிறைந்த நீா் நிலைகளுக்கு அருகில் செல்லவோ, குழந்தைகள் மற்றும் சிறுவா்களை நீா் நிலைகளில் உரிய பாதுகாப்பின்றி குளிக்கவோ, விளையாடவோ அனுமதிக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியா் எச்சரித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com