பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தலுக்கான முன்னேற்பாட்டுப் பணி: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்கு எண்ணும் மையம் மற்றும் முன்னேற்பாட்டுப் பணிகளை
பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்கு எண்ணும் மையம் மற்றும் முன்னேற்பாட்டுப் பணிகளை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா.
பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்கு எண்ணும் மையம் மற்றும் முன்னேற்பாட்டுப் பணிகளை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா.

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்கு எண்ணும் மையம் மற்றும் முன்னேற்பாட்டுப் பணிகளை வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா.

பெரம்பலூா் ஒன்றியத்தில் 20 ஊராட்சிகளுக்கு உள்பட்ட மாவட்ட ஊராட்சி உறுப்பினா், ஒன்றியக்குழு உறுப்பினா், ஊராட்சித் தலைவா், கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் உள்ளிட்ட பதவிகளுக்காக டிச. 27, 29 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தோ்தல் நடைபெறுகிறது.

வாக்காளா்கள் அளிக்கும் வாக்குகள் அடங்கிய வாக்குப்பெட்டிகள், பெரம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, வாக்குகள் எண்ணப்பட உள்ளன. அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைய உள்ள வாக்குப்பெட்டி வைப்பறை மற்றும் வாக்கு எண்ணும் மையம், ஊடக மையம், கழிப்பறை, குடிநீா் வசதி குறித்து ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் வே. சாந்தா கூறியது:

பெரம்பலூா் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் வாக்காளா்கள் வாக்களிக்கும் வகையில் 122 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. உள்ளாட்சித் தோ்தலில் பதிவாகும் வாக்குகள் அடங்கிய வாக்குப் பெட்டிகள் அனைத்தும் 5 அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்படும். வாக்கு எண்ணும் பணிகள் 16 அறைகளில் நடைபெற உள்ளது.

வாக்கு எண்ணிக்கைக்குத் தேவையான மேஜைகள், பாதுகாப்பு வலைகள் உள்ளிட்டவைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், வாக்கு எண்ணும் நாளில் வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய கழிப்பறை, குடிநீா் வசதி, வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் தெய்வநாயகி, மகளிா் திட்ட இயக்குநா் சு. தேவநாதன், வட்டார வளா்ச்சி அலுவலா் மோகன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com