Enable Javscript for better performance
பெரம்பலூரில் 5.40 லட்சம், அரியலூரில் 5. 05 லட்சம் வாக்காளர்கள்- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூரில் 5.40 லட்சம், அரியலூரில் 5. 05 லட்சம் வாக்காளர்கள்

    By DIN  |   Published on : 01st February 2019 03:20 AM  |   அ+அ அ-   |    |  


    பெரம்பலூர், குன்னம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் 5.40 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் எனத் தெரிவித்தார் மாவட்ட ஆட்சியர் (பொ) ஆ. அழகிரிசாமி.
    பெரம்பலூர் ஆட்சியரகத்தில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை வியாழக்கிழமை வெளியிட்ட ஆட்சியர் மேலும் கூறியது: 
    பெரம்பலூர் மாவட்டத்தில் 1.9.2018- இல் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், பெரம்பலூர் (தனி) சட்டப்பேரவை தொகுதியில் 2,82,344 வாக்காளர்களும், குன்னம் சட்டப்பேரவை தொகுதியில் 2,58,448 வாக்காளர்களும் என மொத்தம் 5,40,792 பேர் இடம்பெற்றிருந்தனர். 1.9.2018 முதல் 31.10.2018 வரை நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் தொடர்பாக பெறப்பட்ட படிவங்களின் அடிப்படையில், 14,036 வாக்காளர்கள் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளனர். 
    இதில், 6,358 ஆண்களும், 7,677 பெண்களும், 1 இதரரும் உள்ளனர். இறப்பு, இரட்டை பதிவு மற்றும் இடப்பெயர்ச்சி காரணமாக பெரம்பலூர் தொகுதியில் 1,533 ஆண்களும், 1,775 பெண்களும், குன்னம் தொகுதியில் 1,995 ஆண்களும், 2,833 பெண்களும், 1 இதர வாக்காளரும் நீக்கப்பட்டுள்ளனர்.  
    இறுதி வாக்காளர் பட்டியலின்படி, பெரம்பலூர் தொகுதியில் உள்ள 332 வாக்குச் சாவடிகளில் மொத்தம் 2,86,397 வாக்காளர்களில், 1,40,270 ஆண்களும், 1,46,112 பெண்களும்,15 இதர வாக்காளர்களும் உள்ளனர்.
    குன்னம் பேரவைத் தொகுதியில் உள்ள 320 வாக்குச் சாவடிகளில் மொத்தம் 2,60,294 வாக்காளர்களில், 1,29,764 ஆண்களும், 1,30,520 பெண்களும், 10 இதர வாக்காளர்களும் உள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 2 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 5,46,691 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 2,70,034 ஆண்களும், 2,76,632 பெண்களும், 25 இதர  வாக்காளர்களும் உள்ளனர் என்றார் அழகிரிசாமி. 
    நிகழ்ச்சியில், வருவாய் கோட்டாட்சியர் (பொ) ராஜராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


    அரியலூர்

    அரியலூர் மாவட்டத்தில் 5.05 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் என்றார் மாவட்ட ஆட்சியர் மு. விஜயலட்சுமி.
    அரியலூர் மாவட்டத்தில் அரியலூர்,ஜயங்கொண்டம் ஆகிய இரு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை அனைத்துக் கட்சியினர் முன்னிலையில் வியாழக்கிழமை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர் மு. விஜயலட்சுமி பின்னர் தெரிவித்தது:
    இந்தியத் தேர்தல் ஆணைய உத்தரவின்படி, 01.01.2019 ஐ தகுதி நாளாக கொண்டு கடந்த 01.09.2018 முதல் 31.10.2018 வரையிலான காலத்தில் நடைபெற்ற சிறப்பு சுருக்கத் திருத்தம் 2019-ன் போது வாக்காளர் சேர்க்க, நீக்கம் மற்றும் திருத்த படிவங்கள் பெறப்பட்டன.
    அதன்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் 2019 தொடர்பாக அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர், ஜயங்கொண்டம் சட்டப் பேரவைத் தொகுதிக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டதின்பேரில்  அரியலூர் தொகுதியில் 1,26,080 ஆண்களும், 1,25,376 பெண்களும், 5 இதரர் மொத்தம் 2,51,461 வாக்காளர்கள் உள்ளனர். 
    ஜயங்கொண்டம் தொகுதியில் 1,26,574 ஆண்களும், 1,27,649 பெண்களும், 1 இதரர் என மொத்தம் 2,54,224 வாக்காளர்கள் உள்ளனர். இம்மாவட்டத்தில் 2,52,654 ஆண்களும், 2,53,025 பெண்களும், 6 இதரர் என மொத்தம் 5,05,685 வாக்காளர்கள் உள்ளனர் என்றார்.
    நிகழ்ச்சியில், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தா. பரிதாபானு, அரியலூர் வருவாய்க் கோட்டாட்சியர் நா. சத்தியநாராயணன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp