பெரம்பலூரில் குழந்தையின்மைக்கான இலவச மருத்துவ முகாம்

பெரம்பலூர் லட்சுமி டெஸ்ட் டியூப் பேபி சென்டர் மற்றும் லட்சுமி மருத்துவமனை இணைந்து, ஞாயிற்றுக்கிழமை

பெரம்பலூர் லட்சுமி டெஸ்ட் டியூப் பேபி சென்டர் மற்றும் லட்சுமி மருத்துவமனை இணைந்து, ஞாயிற்றுக்கிழமை நடத்திய குழந்தையின்மைக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாமில் 123 பேர் பங்கேற்றனர்.
லட்சுமி மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் சி. கருணாகரன் முகாமைத் தொடங்கி வைத்தார். இந்த முகாமில், மகப்பேறு மற்றும் குழந்தையின்மைக்கான சிறப்பு மருத்துவர் ஜெயலெட்சுமி தலைமையிலான மருத்துவக் குழுவினர் சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கினர். 
முகாமில், கரு முட்டை குழாய்களில் அடைப்பு அல்லது வேறு ஏதேனும் பிரச்னை உள்ளதா என்பதற்கான பரிசோதனை, பைப்ராய்ட் அடினோ மையோஸிஸ் எண்டோமெட்ரியோஸிஸ், ஓலி கோஸ் பெர்மியா அசூஸ் பெர்மியா உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.  இந்த முகாமில், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 123 பேர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com